சட்டத்திற்கு அமைவாக வரிகளையும் தீர்வைகளையும் சேகரிப்பதன் மூலம், குறித்த இலக்குகளுக்கு அப்பால், மத்திய மாகாண பொதுமக்களின் மேம்பாட்டிற்குத் தேவையான நிதி வளங்களைப் பெறக்கூடிய வினைத்திறன்மிக்க, சமத்துவமான மற்றும் நியாயமான வரி நிர்வாக முறைமையொன்றை நிறுவுதலும், தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முறையான கொள்கையொன்றைப் பேணுதலும்.
எமது முக்கிய பொறுப்புகள்
- மத்திய மாகாண நியதிச்சட்டங்களுக்கு அமைவாக மாகாண வரிகளையும் தீர்வைகளையும் மதிப்பிட்டுச் சேகரித்தல்.
- வரிகள் மற்றும் தீர்வைகள் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டுதல்.
- வரிகள் மற்றும் தீர்வைகள் தொடர்பான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குதல்.
- வரிகள் மற்றும் தீர்வைகளைச் செலுத்துவதற்குத் தேவையான படிவங்களையும் வவுச்சர்களையும் வழங்குதல்.
- மத்திய மாகாணத்தில் அடகு வியாபாரங்களைப் பதிவுசெய்து அனுமதிப்பத்திரம் வழங்குதல்.
- வருமானச் சேகரிப்பிற்கான வினைத்திறன்மிக்க, இற்றைப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறையைப் பேணுதல்.
இறுதியாகப் புதுப்பிக்கப்பட்டது: 2026 ஒக்டோபர் 11