மாகாண வருமானத் திணைக்களம் மத்திய மாகாணம் • மத்திய மாகாண சபை · இலங்கை

உள்ளக அலுவல்கள் அலகு

Internal Affairs Unit

பின்னணி

ஜனாதிபதியின் செயலாளரினால் 2025 பெப்ரவரி 18ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட PS/SB/Circular/2/2025 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக, மத்திய மாகாண வருமானத் திணைக்களத்தின் உள் அலுவல்கள் பிரிவு (Internal Affairs Unit – IAU) 2025 நவம்பர் 16ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டது.

உள் அலுவல்கள் பிரிவின் முக்கிய நோக்கங்கள்

  • நிறுவனத்திற்குள் ஊழலைத் தடுப்பதுடன், நேர்மையும் ஒருமைப்பாடும் கொண்ட கலாசாரத்தை உருவாக்குதல்.
  • நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதுடன், நிறுவன நடைமுறைகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் அணுகுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துதல்.
  • நிறுவனத்திற்குள் நெறிமுறைசார் ஆட்சிமுறையை மேம்படுத்துதல்.
  • முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்வதை ஊக்குவித்தல், தகவல் வெளிப்படுத்துவோரைப் பாதுகாத்தல் மற்றும் இரகசியத்தன்மையைப் பேணுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பானதும் இலகுவாக அணுகக்கூடியதுமான பொறிமுறையொன்றை உருவாக்குதல்.
  • சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுடன் (CIABOC) இணைந்து செயற்படுவதன் மூலம் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல்.

உள் அலுவல்கள் பிரிவின் பொறுப்புகள் மற்றும் பணிகள்

  • நிறுவனத்திற்குள் காணப்படும் கட்டமைப்பு ரீதியான தடைகளை அடையாளம் காண்பதற்காக நடைமுறையிலுள்ள செயன்முறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை மீளாய்வு செய்தல், அத்துடன் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைகளை எளிமைப்படுத்துதல்.
  • நிறுவனத்திற்குள் ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடத்தைகளுக்கு வழிவகுக்கக்கூடிய இடங்களை அடையாளம் காண்பதற்காக ஊழல் இடர் மதிப்பீடுகளை (Corruption Risk Assessments – CRAs) மேற்கொள்ளுதல் மற்றும் இலக்குவைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல்.\
  • நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட ஊழல் எதிர்ப்பு நோக்கங்கள் மற்றும் உத்திகளைக் கொண்ட நிறுவன நேர்மைச் செயல் திட்டமொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்துதல்.
  • நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை தேசிய ஊழல் எதிர்ப்புச் செயல் திட்டத்துடன் சீரமைப்பதன் மூலம் தேசிய ஊழல் எதிர்ப்பு நோக்கங்களுடன் முழுமையான இணக்கப்பாட்டை உறுதிப்படுத்துதல்.
  • 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்புச் சட்டங்களுடன் நிறுவனம் கொண்டுள்ள இணக்கப்பாட்டை மதிப்பீடு செய்வதற்காகத் தொடர்ச்சியான இணக்கப்பாட்டு மீளாய்வுகளை மேற்கொண்டு, மேம்படுத்தப்பட வேண்டிய துறைகளை அடையாளம் காணுதல்.
  • அனைத்து அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களைச் சமர்ப்பிப்பதற்கான தேவைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்துதல். அத்துடன், CIABOC விதிமுறைகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு அமைவாக நலன் முரண்பாடுகளை முகாமைத்துவம் செய்தல்.
  • நிறுவனத்திற்குள் ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொண்டு முகாமைத்துவம் செய்வதற்கான பாதுகாப்பான பொறிமுறையொன்றை நிறுவுதல்; அத்தகைய அனைத்து முறைப்பாடுகளும் உரிய உத்தியோகத்தர்கள் அல்லது பிரிவுகளினால் தாமதமின்றிக் கையாளப்படுவதை உறுதிப்படுத்துதல்; வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தொடர்ச்சியான பின்னூட்டங்களை வழங்குதல். தேவையான சந்தர்ப்பங்களில், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்காகப் பொருத்தமான விடயங்கள், கண்டறியப்பட்ட தகவல்கள் அல்லது ஆதாரங்களை CIABOC நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தல்.
  • நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளை உள்ளடக்கிய பிரஜைகள் சாசனமொன்றைத் தயாரித்து வெளியிடுதல்.
  • அரச உத்தியோகத்தர்களால் பின்பற்றப்பட வேண்டிய தரப்படுத்தப்பட்ட ஒழுக்கநெறிக் கோவை உள்ளிட்ட, நெறிமுறைசார் ஆட்சிமுறையை மேம்படுத்தும் கொள்கைகளை நிறுவி நடைமுறைப்படுத்துதல்.
  • ஊழியர்கள் ஊழல் எதிர்ப்புக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல்.
  • தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மை மதிப்பீட்டிற்கான நிறுவனத்தின் மைய ஒருங்கிணைப்புப் புள்ளியாகச் செயற்படுதல். அத்துடன், CIABOC மற்றும் தேசிய ஊழல் எதிர்ப்புக் கட்டமைப்பினால் வழங்கப்படும் வழிகாட்டல்களுக்கு அமைவாக, நிறுவனமானது நேர்மை மதிப்பீட்டுச் செயன்முறையில் பங்கேற்பதையும் அதனுடன் இணைந்து செயற்படுவதையும் உறுதிப்படுத்துதல்.
  • பிரிவின் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தொடர்ச்சியான வழிகாட்டல்களையும் ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் CIABOC நிறுவனத்துடன் தொடர்புகளைப் பேணுதல்.
  • உள் அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள், ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் முன்னேற்றம், எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள் ஆகியவற்றைச் சுருக்கமாக உள்ளடக்கிய காலமுறை அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகளைத் தயாரித்தல்.
  • நேர்மை மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் தனியார் துறைசார் பங்குதாரர்களுடன் இணைந்து செயற்படுதல்.

இறுதியாகப் புதுப்பிக்கப்பட்டது: 2026 நவம்பர் 23

முத்திரைத் தீர்வையை இணையவழியாகச் செலுத்தி நிர்வகிக்கவும்

நொத்தாரிசுகள், காணிப் பதிவகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உத்தியோகபூர்வ இணையவழி வாயிலின் ஊடாக உறுதிகளைச் சமர்ப்பித்து முத்திரைத் தீர்வையைக் கண்காணிக்கலாம்.

இணையவழி முத்திரைத் தீர்வை வாயில்
இணையவழி முத்திரைத் தீர்வை வாயில்